Breaking News
தங்கம் மீதான 15% வரியை ரத்து செய்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி!

அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி!

தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முன்வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பொருளாதார மற்றும் பூகோள ரீதியான சில இன்னல்களே தற்போதைய நெருக்கடி நிலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண கைக்கோர்க்குமாறு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆசியாவின் முன்னணி ஜனநாயக நாடுகளில் ஒன்றாக, ஜனநாயக கட்டமைப்பிற்குள்ளேயே இதற்கு தீர்வு காணப்பட வேண்டி உள்ளது.

அனைத்து மக்களுக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காகவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்காக அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டு, தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு ஒன்றிணையுமாறு, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

Today rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 13, 2021)

About அருள்

Check Also

Today rasi palan – 13.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 13, 2021)

Today rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 19, 2021)

Today rasi palan – 19.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 19, 2021)   இன்றைய …