ஆரம்பமானது விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார்.

தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது.

கட்சியின் முதல் மாநாடு என்பதால் விஜய் என்ன பேச உள்ளார், கட்சியின் எதிர்கால கொள்கைகள் என்ன, திட்டங்கள், எதிர்கால அரசியல் பயணம், அவர் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப் போகிறார் என்பதை அறியவும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், இரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

அதுமட்டுமின்றி இம்மாநாட்டை ஒட்டுமொத்த தமிழக மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் உற்றுநோக்கியுள்ளதால் மாநாடு தனிச்சிறப்பையும், மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

அதேவேளை நடிகர்களான பிரபு, சிவகார்த்திகேயன், சூர்யா நடிகர்களான ஆகியோர் விஜய்யின் வெற்றிப் பயணத்திற்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Check Also

அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். …