Breaking News
எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் சர்வதேச நிபுணர்கள்

எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் சர்வதேச நிபுணர்கள்

எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் சர்வதேச நிபுணர்கள்

எம்.டி நியுவ் டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இன்று கப்பலில் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்கள் தீப்பற்றியுள்ள கப்பலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள நேற்று இலங்கைக்கு வருகைத்தந்தனர்.

கப்பலின் தற்போதை நிலைமை, எதிர்வரும் நாட்களில் ஏதேனும் வெடிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதா? என்பது தொடர்பில் அவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.

குறித்த கப்பலுக்குரிய நிறுவனத்தினால் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட குழுவில் மீட்பு குழுவினர், அனர்த்த மதிப்பீட்டாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்ட 10 பேர் அடங்குகின்றனர்.

இதேவேளை எம்.டி நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலின் விளைவுகள் தொடர்பில் சட்டமா அதிபர், விடயத்திற்கு பொறுப்பான பிரிவினருடன் நேற்று கலந்துரையாடியுள்ளார்.

சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி, அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

கப்பல் விபத்து குறித்த சட்ட விடயங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யவும் உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன்றைய கொரோனா நிலவரம் 07.09.2020

பின்லேடனின் மருமகள் டிரம்புக்கு ஆதரவு

About அருள்

Check Also

தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர்

தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர்

தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தும் கட்சியினர் கட்சியில் உள்ள முக்கிய நபர்கள் அமெரிக்கா தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு டிரம்ப்பை வற்புறுத்தி …