எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்குப் பெட்டிகள் விநியோகம் ஆரம்பம்!

Spread the love

நாளை (25) இடம்பெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வாக்களிப்பு பணிகளுக்காக 600 அரச சேவையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டப்ளியூ ஏ தர்மசிறி தெரிவித்துள்ளார்.

தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 500 காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

48 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்காக 55,643 பேர் தகுதிப் பெற்றுள்ளனர்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுவொன்றும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.