Friday , 25 April 2025

சாணக்கியன் இராசமாணிக்கம் ஆற்றிய உரையில் சபைக்கு பொருத்தமற்ற வார்த்தைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் – நளிந்த ஜயதிஸ்ஸ

Spread the love

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆற்றிய உரையில் சபைக்கு பொருத்தமற்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள், மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து பிரதமரிடம் கேள்விகளை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்ததன் பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரிய ‘சக பாராளுமன்ற உறுப்பினர் பயன்படுத்திய வார்த்தை பிரயோகம் மற்றும் மொழி நடை சபைக்கு பொறுத்தமற்றதாக உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்காதீர்கள் என்று சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியிடம் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதமரிடம் கேள்வியெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதனை சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்று, முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளித்தால் பாராளுமன்றத்தின் கௌரவம் மலினப்படுத்தப்படும். ஆகவே இவ்விடயம் குறித்து அவதானம் செலுத்துங்கள் என்று சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

இவ்விடயத்தை சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுச் செல்வதாக சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.

Check Also

இலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News

Spread the loveஇலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News