தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே, ‘அந்தர் பல்டி’யாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவுக்கு குறைந்து, ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் ஒரு சவரன் ரூ.72,040-க்கும் விற்பனையானது. அதன்பிறகு, தொடர்ந்து 4 நாட்கள் நிலையாக அதே விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 28-ந்தேதி, தங்கம் விலை மீண்டும் ரூ.72 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520-க்கு விற்கப்பட்டது. 29-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.71, 840-க்கு விற்பனை செய்யப்பட்டது. அட்சய திருதியையொட்டி, நேற்று முன்தினம் அதே விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம், பொது மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காண்பித்தார்கள்.
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 அதிரடியாக குறைந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.109-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:
02-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
01-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,200
30-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
29-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
28-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:
02-05-2025- ஒரு கிராம் ரூ.109
01-05-2025- ஒரு கிராம் ரூ.109
30-04-2025- ஒரு கிராம் ரூ.111
29-04-2025- ஒரு கிராம் ரூ.111
28-04-2025- ஒரு கிராம் ரூ.111