Breaking News
தமிழகத்தில் நடந்த நீட் தேர்வில் 57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

தமிழகத்தில் நடந்த நீட் தேர்வில் 57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

தமிழகத்தில் நடந்த நீட் தேர்வில் 57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 57 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெள்ளக்கோவிலைச் சேர்ந்த மாணவர் 720க்கு 710 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்று, அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி நாடு முழுவதும் 7லட்சத்து 70ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒடிசாவை சேர்ந்த சோயப் அக்தப் என்ற மாணவர் 720க்கு 720 மதிப்பெண்களைப் பெற்று தேசிய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். டெல்லி மாணவி ஆகன்ஷா சிங்கும் முழுமதிப்பெண் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு 48.57% ஆக இருந்த தேர்ச்சி விகிதம் 57.44% ஆக அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 710 மதிப்பெண் பெற்று தமிழக அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் 8 வது இடமும் பிடித்துள்ளார்.

நாமக்கல்லை சேர்ந்த மோகன பிரபா 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், பெரியகுளத்தைச் சேர்ந்த ஜீவித்குமார் 664 மதிப்பெண்களுடன் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் நாடு முழுவதும் மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தை பொருத்தவரையில், மருத்துவ இடங்களில் 7.5 விழுக்காடு இடங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான, மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை, மருத்துவ கலந்தாய்வு அறிவிக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தகவல்

About அருள்

Check Also

யாழில் கோர விபத்து - சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த …