பின்லேடனின் மருமகள் டிரம்புக்கு ஆதரவு

பின்லேடனின் மருமகள் டிரம்புக்கு ஆதரவு

பின்லேடனின் மருமகள் டிரம்புக்கு ஆதரவு

டிரம்பால் மட்டுமே இரட்டை கோபுர தாக்குதல் போன்ற மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடக்காமல் தடுக்க முடியும் என்று ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின் லேடின் தெரிவித்துள்ளார். ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ‘செப்டம்பர் 11’ தாக்குதலை போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா எதிர்கொள்ளக்கூடும்.

ஒபாமா, பைடன் ஆட்சி நிர்வாகத்தில ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் பெருகியது, அவர்கள் ஐரோப்பாவிற்கு வர வழிவகுத்தது. பயங்கரவாதிகளை வேரோடு ஒழிப்பதில் டிரம்ப் முன்மாதிரியாக திகழ்கிறார்.

வெளிநாட்டு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவையும் எங்களையும் டிரம்ப் திறம்பட காப்பாற்றி வருகிறார்.

2015-ல் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்த நாளிலிருந்து நான் டிரம்ப்பின் ஆதரவாளராக இருந்தேன். நான் அந்த மனிதரை தூரத்திலிருந்தே பார்த்தேன்.

அவரின் உறுதியான தீர்மானங்களை பாராட்டுகிறேன். அவர் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும். இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளின் எதிர்காலத்துக்கும் இன்றியமையாதது. இவ்வாறு அவர் கூறினார்.

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.72 கோடியாக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது

About அருள்

Check Also

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09 கோடியாக உயர்ந்துள்ளது. …