Thursday , 24 April 2025

பிரதமர் ஹரிணி அமரசூரிய மன்னிப்பு கேட்கவேண்டும்

Spread the love

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய , வடக்கின் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் மாவிட்டப்புரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பிரதமர் ஹரினி அமரசூரிய, அதன் போது பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர் ஆலய சூழலில் காலணிகளுடன் சென்ற விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை இருந்தார்.

இன்று (12) யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். அவர் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.

இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் நடைபெற்ற போது, ஆலயத்தினுள் அதிரடியாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் புகுந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.

பிரதமரின் பாதுகாப்புக்காக வந்தவர்கள், காலணிகளோடு ஆலய வளாகத்தில் புகுந்துள்ளார்கள். அது இந்து மக்களுக்கு மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Check Also

இலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News

Spread the loveஇலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News