பொதுத் தேர்தல் தொடர்பில் 401 முறைப்பாடுகள் பதிவு!

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 401 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, கிடைக்கப்பெற்றுள்ள சகல முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறலுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேர்தல் வன்முறை தொடர்பில் இதுவரையில் எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை, பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய 309 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதுடன், 92 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Check Also

அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். …