மகாலட்சுமி அப்பவே சொன்னாங்க! பிக்பாஸில் ரவீந்தர் கண்ணீர்

பிக்பாஸுக்கு போக வேண்டாம் என என் பொண்டாட்டி மகாலட்சுமி அப்போதே சொன்னாள், நான்தான் கேட்கவில்லை என விஜே தீபக்கிடம், தயாரிப்பாளர் ரவீந்திரன் அழும் காட்சிகள் அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் என்றாலே சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமே இருக்காது. இதற்கு பிக்பாஸ் சீசன் 8 சளைத்தது இல்லை. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவருக்கு 15 கோடி ரூபாய் முதல் 18 கோடி ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.

கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் போட்டியாளர்களை விமர்சிக்கும் முறையை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள். அது போல் இந்த முறை ஒவ்வொரு ப்ரோமோவிலும் விஜய் சேதுபதி, ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என கூறுவார்.

இதனால் அவருடைய முதல் வாரம் எப்படி இருக்கிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சீசனில் நேற்றைய தினம் விஜய் சேதுபதி போட்டியாளர்கள் எல்லோருடனும் கலந்துரையாடினார். அப்போது ரவீந்தர் செய்த பிராங்க் மற்றும் அதனால் ஏற்பட்ட மனக்கசப்பு ஆகியவை பற்றியும் அவர் பேசியிருந்தார்.

அப்போது பேசிய ஆர் ஜே ஆனந்தி, “ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவரும் சண்டை போடும் போது அது ப்ராங்காக இருக்குமோ என சந்தேகம் ஆரம்பத்திலேயே வந்தது. பொதுவாக ரவீந்தர் உட்கார்ந்திருப்பார். தண்ணீர் உள்பட எது வேண்டுமானாலும் நாங்கள்தான் கொண்டு வந்து கொடுப்போம்.

அப்போது கூட அவர் எழுந்து கொள்ள மாட்டார். ஆனால் பிராங்க் செய்ய எழுந்து நின்று ஒரு விஷயம் செய்தார். அதை செய்ய முடியும் அவர் எங்களிடம் வேலை வாங்கும் போது எங்களை பயன்படுத்திவிட்டாரே என தான் எனக்கு தோன்றியது என ஆனந்தி தெரிவித்திருந்தார்.

இதனால் ரவீந்தரின் முகம் மாறியது. இந்த ஷோ முடிந்த பிறகு இந்த விஷயத்தை நினைத்து ரவீந்தர் அழுது கொண்டிருந்தார். அப்போது வந்த விஜே தீபக் சமாதானம் செய்தார். இதற்கு ரவீந்தர் கூறுகையில் நான் கால் வலிக்கிறது என்பதால்தான் தண்ணீர் கேட்டேன்.

ஆனால் ஆனந்தியோ நான் உட்கார்ந்து கொண்டு வேலை வாங்குவதாக தெரிவித்தார். இதை கேட்கும் போது எனக்கு மனசு கஷ்டமாக இருக்கிறது. என் மனைவி மகாலட்சுமி அப்போதே சொன்னார், இப்படியெல்லாம் நடக்கும் என்று! என கூறிய ரவீந்தர் கண்ணீர் விட்டார். இந்த பிக்பாஸ் தொடக்க விழாவின் போதே ரவீந்தரை, விஜய் சேதுபதி செமையாக கலாய்த்து தள்ளிவிட்டார்.

“என்ன பிக்பாஸ் நிகழ்ச்சிகளை ரிவ்யூ செய்ததால் நல்ல வருமானம் போலயே. இப்போது நீங்கள் உள்ளே வந்துவீட்டீர்களே! உங்கள் வேலையை யார் செய்வார்கள் என கேட்டிருந்தார். அது போல் மகாலட்சுமி, மேடைக்கு வந்த போது, அவர் கூறுகையில், “பிக்பாஸுக்கு போக போவதாக என்னிடம் என் கணவர் கூறினார்.

நான் முதலில் வேண்டாம்” என்றேன் என்றார். அதற்கு விஜய் சேதுபதி, ஏன் என கேட்க , அதற்கு மகாலட்சுமியோ, “இவரால் தன்னுடைய வேலையையே செய்து கொள்ள முடியாது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் எல்லா வேலைகளையும் பகிர்ந்து செய்ய வேண்டும் ” என்றார். இதைத்தான் ரவீந்தர் அழுது கொண்டே கூறியுள்ளார்.

Check Also

அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். …