Saturday , July 20 2019
Home / இலங்கை செய்திகள் / அடிப்படை வசதிகள் எதுவுமின்றி முள்ளிக்குளம் மக்கள்
முள்ளிக்குளம் மக்கள்
முள்ளிக்குளம் மக்கள்

அடிப்படை வசதிகள் எதுவுமின்றி முள்ளிக்குளம் மக்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

சொந்த இடங்­க­ளில் மீள்­கு­டிய­ மர்ந்து இரு ஆண்­டு­கள் ஆகி­யுள்ள நிலை­யில் தமக்கு அடிப்­படை வச­தி­கள் எவை­யும் ஏற்­ப­டுத்­தித் தரப்­ப­ட­வில்லை என்று முள்­ளிக்­கு­ளம் மக்­கள் குற்­றஞ்­சாட்­டு­ கின்­ற­னர்.

அரச அதி­கா­ரி­கள் பார­பட்­ச­மாக நடந்து கொள்­கின்­ற­னர் என்­றும் அவர்­கள் விச­னம் தெரி­வித்­த­னர்.

மன்­னார், முசலிப் பிர­தேச செய­லர் பிரி­வுக் குட்­பட்­டது முள்­ளிக்­கு­ளம் கிரா­மம். அங்­குள்ள மக்­கள் போர் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­த­னர்.

அவர்­கள் மலங்­காடு எனும் இடத்­தில் தற்­கா­லி­க­மா­கத் தங்க வைக்­கப்­பட்­ட­னர். அங்கு பெரும் சிர­மத்­தின் மத்­தி­யி­லேயே அவர்­கள் வாழ்க்­கை­யைக் கொண்டு நகர்த்­தி­னார்­கள்.

குடி தண்­ணீர், கல்வி உட்­ப­டப் பொதுத் தேவை­களை நிறை­வேற்று­ வதற்­காக அவர்­கள் பல மைல் தூரம் செல்ல வேண்­டிய நிலமை இருந்­தது.

2009ஆம் ஆண்டு போர் முடிந்த பின்­ன­ரும் அவர்­கள் முள்­ளிக்­கு­ளத்­தில் மீள்­குடி­ யமர்த்­தப்­ப­ட­வில்லை அத­னால் அந்த மக்­கள் தம்­மைத் தமது பூர்­வீக நிலத்­தில் குடி­ய­மர அனு­ம­திக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி முள்­ளிக்­கு­ளம் கடற்­படை முகா­முக்கு முன்­பாக 2016 ஆம் ஆண்டு தொடர் போராட்­டத்தை ஆரம்­பித்­த­னர்.

மக்­க­ளின் தொடர் போராட்­டத்தை அடுத்து முள்­ளிக்­கு­ளத்­தில் உள்ள 100 ஏக்­கர் காணி­கள் விடு­விக்­கப்­ப­டும் என்­றும், ஏனைய காணி­கள் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­ப­டும் என்­றும் அரசு தெரி­வித்­தது.

அங்கு மக்­க­ளின் வீடு­க­ளில் முகாம்­களை அமைத்­துத் தங்­கி­யி­ருந்த கடற்­ப­டை­யி­னர் 6 மாதத்­துக்­குள் வெளி­யே­று­வர் என்­றும் வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

அதன்­பின்­னர் முள்­ளிக்­கு­ளம் மக்­கள் அங்கு மீள்­கு­டி­ய­மர்ந்­த­னர்.

அங்கு மக்­கள் மீள்­கு­டி­ய­மர்ந்து தற்­போது இரு ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன.

ஆனால் தமக்கு எது­வித அடிப்­படை வச­தி­க­ளும் இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை என்று அந்தக் கிராம மக்­கள் குற்­ற­ஞ்சாட்­டு­கின்­ற­னர்.

தற்­கா­லி­ கொட்­ட­கை­க­ளி­லேயே தாம் வாழ்­கின்­றோம் என்­றும், குடி தண்­ணீர் வச­தி­கள், மின்­சார வச­தி­கள் எவை­யும் தமக்கு வழங்­கப்­ப­ட­வில்லை என்­றும் அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

யானை­க­ளின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யில் தற்­கா­லி­கக் கொட்­ட­கை­க­ளில் பெரும் சிர­மத்­தின் மத்­தி­யில் வாழ வேண்­டி­யுள்­ளது.

அதி­கா­ரி­கள் பார­மு­க­மாக நடந்­து­கொள்­கின்­ற­னர். எமக்கு அடிப்­படை வச­தி­களை ஏற்­ப­டுத்­தித் தரச் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று அவர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

Check Also

வாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல்

வாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!இந்தியாவில் பசுக்கள் புனிதமாகவும்,கடவுளாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான பசுக்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகத் …