Thursday , 17 July 2025

லொஹான் ரத்வத்தவின் மற்றுமொரு வாகனம் மீட்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுடன் கூடிய ஜீப் வண்டி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

தெல்தெனிய காவல்துறையினர் இதனைக் கைப்பற்றியுள்ளனர்.

தெல்தெனிய காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெல்தெனிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் சொகுசு ரக மகிழுந்தை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த எதிர்வரும், 7ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் …