Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இன்றே விசாரணை
ரஜினிக்கு

ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இன்றே விசாரணை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

கடந்த 2017ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடந்தபோது ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை தள்ளி போய்க்கொண்டே இருந்து வரும் நிலையில் இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்ய வேண்டும் என்று

நேற்று சமீபத்தில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் தரப்பில் இருந்து கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நேற்று உச்சநீதிமன்றம் அறிவித்தது இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்றே எடுத்து கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை வேகமெடுத்து ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

Check Also

சிரியா

தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி: பின்வாங்குமா குர்து படைகள்?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share சிரியாவில் குர்திஷ் படைகள் பாதுகாப்பான முகாம்களுக்கு திரும்புவதற்காக துருக்கிப் படைகளுடன் அமெரிக்கா 120 மணி நேர …