தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1100 பேர் மீது வழக்கு

தடையை மீறி வெளியே சுற்றியதாக ஒரே நாளில் 1100 பேர் மீது வழக்கு

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியில் அவசியம் இன்றி சுற்றுவோரை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

சில இடங்களில் தேவையின்றி சுற்றிய இளைஞர்களுக்கு லத்தியடியும் கிடைத்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் தடை உத்தரவை மீறிய 1100 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 1,100 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தொற்று நோய் தடுப்பு மற்றும் பேரிடர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

உலகத்தை கிடுகிடுக்க வைத்த கொரோனா: ஒரே நாளில் 2300 பலி

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் போதுமானது இல்லை

உண்மையிலே கொரோனா வந்ததற்கு காரணம் அந்த சிறுவன் தான் | லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

ஊரடங்கை மீறி தொற்றை பரப்பினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம்

கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close