இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

13ஆவது திருத்த சட்­டத்தில் இருக்­கின்ற பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்க முடி­யாது

கெஹெ­லிய

13ஆவது திருத்த சட்­டத்தில் இருக்­கின்ற பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்க முடி­யாது

அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்த சட்­டத்தில் இருக்­கின்ற பொலிஸ் அதி­கா­ரத்தை மாகா­ண­ச­பை­க­ளுக்கு ஒரு­போதும் வழங்க முடி­யாது.

அது ஒரு சாத்­தி­ய­மற்ற ஏற்­பா­டா­கவே காணப்­ப­டு­கின்­றது என்று அர­சாங்­கத்தின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார்.

எனினும் காணி அதி­கா­ரங்கள் தொடர்பில் ஆணைக்­கு­ழு­வொன்றை அமைத்து ஆராய முடியும் என்றும் கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல்ல குறிப்­பிட்டார்.

மாகா­ண­சபை முறை­மையில் காணப்­படும் பொலிஸ் மற்றும் காணி அதி­காரம் தொடர்­பாக ஏற்­பட்­டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பில் குறிப்­பி­டு­கை­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அர­சாங்­கத்தின் பேச்­சாளர் கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல குறிப்­பி­டு­கையில்,

13ஆவது திருத்த சட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பொலிஸ் அதி­கா­ரத்தை மாகா­ண­ச­பை­க­ளுக்கு வழங்­கு­வது சாத்­தி­ய­மான விட­ய­மல்ல.

அது யார்த்­த­மற்ற விட­ய­மாகும். பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கினால் பல்­வேறு தேவை­யற்ற பிரச்­சி­னைகள் உரு­வாகும்.

கடந்த காலத்தில் உரு­வாக்­கப்­பட்ட புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபில் ஒவ்­வொரு மாகா­ணங்­களும் தமக்கு ஏற்­ற­வாறு பொலிஸ் சீரு­டை­களை மாற்ற முடியும் என்ற ஏற்­பா­டு­களும் காணப்­பட்­டி­ருந்­தன.

எனவே பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்­கு­வது என்­பது தேவை­யற்ற பிரச்­சி­னை­களை உரு­வாக்­க­ுவ­தா­கவே அமையும்.

உதா­ர­ண­மாக மேல் ­மா­கா­ணத்தில் ஒருவர் குற்­றத்தை புரிந்­து­விட்டு வட­மா­கா­ணத்­திற்கு சென்­று­விட்டால் உள­வுப்­பி­ரி­வினர் கூட அந்த சந்­தே­க­ந­பரை கைது செய்ய வடக்கு முத­ல­மைச்­சரின் அனு­ம­தியைப் பெற­வேண்­டிய நிலைமை ஏற்­படும்.

இலங்கை போன்ற ஒரு நாட்­டுக்கு இது பொருத்­த­மான விட­ய­மாக அமை­யாது.

எனவே பொலிஸ் அதி­காரம் என்­பது வழங்­கப்­பட முடி­யா­த­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.
அதனால் அது தொடர்பில் தொடர்ந்து பேசிக்­கொண்­டி­ருப்­பதில் அர்த்­த­மில்லை.
இந்த விட­யத்தில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவும் மிகவும் உறு­தி­யாக இருக்­கின்றார்.

எனினும் காணி அதி­காரம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்­கலாம். அதா­வது காணி ஆணைக்­கு­ழுவை அமைத்து காணி அதி­கா­ரங்கள் தொடர்பில் பரி­சீ­லிக்­கலாம்.
ஆனால் பொலிஸ் அதி­காரம் என்­பது சாத்­தி­ய­மற்­ற­தா­கவே உள்­ளது.

இதே­வேளை வடக்கு, கிழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் பேச்சு நடத்­த­வேண்டும் என்­பதே எமது நிலைப்பாடாகும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல.

வடக்கு, கிழக்கில் பொது அமைப்புக்கள், உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப் பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

திருமலையில் விபச்சார விடுதி : உரிமையாளரும் 3 பெண்களும் கைது

 

Tamil News

 

 

 

Tamilnadu News

 

 

 

World Tamil News

 

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close