Breaking News
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 231 ஆக உயர்ந்தது. நோய் தொற்றில் இருந்து சுமார் 6 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 85 ஆயிரம் மாதிரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் புதிதாக 987 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோவையில் மேலும் 394 பேருக்கும், திருவள்ளூரில் 312 பேருக்கும், செங்கல் பட்டில் 297 பேருக்கும்,கடலூரில் 289 பேருக்கும், வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் பலி

நான் வெற்றி பெற்றால் 2 முக்கிய விஷயங்கள் நடக்கும் – டிரம்ப்

About அருள்

Check Also

ஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் - ட்ரம்ப்

ஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப்

ஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும் – ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வென்றால், …