Breaking News

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை மீறிய 178 பேர் கைது

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை மீறிய 178 பேர் கைது

நேற்றிரவு 10 மணிமுதல் இன்று அதிகாலை 4 மணிவரையான காலப்பகுதியினுள், நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை மீறிய 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் காவல்துறையினரால் 38 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை முதல் இதுவரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 66 ஆயிரத்து 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 18 ஆயிரத்து 733 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 229 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரேநாளில் 150 தொற்றாளர்கள் அடையாளம்

About அருள்

Check Also

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம் மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் …