Breaking News

தேசியப் பட்டியல் தவிர்ந்த 196 ஆசனங்களில் 128 ஆசனங்களை கைப்பற்றி பொதுஜன முன்னணி

தேசியப் பட்டியல் தவிர்ந்த 196 ஆசனங்களில் 128 ஆசனங்களை கைப்பற்றி பொதுஜன முன்னணி

தேசியப் பட்டியலில் உள்ளடங்கும் 29 உறுப்பினர்கள் தவிர்ந்த மாவட்ட ரீதியில் வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய 196 நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களுக்காக போட்டியிட்டவர்களில் 128 பேர் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவடைந்துள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 47 உறுப்பினர்களையே வெற்றி கொள்ள முடிந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் 9 உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்ததோடு ஈபிடிபி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு 2 ஆசனங்கள் கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணி 1 ஆசனமும் தேசிய காங்கிரஸ்க்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.

மேலும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ள அதேநேரம் தமிழ் மக்கள் விடுதலை கூட்டணிக்கு 1 பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. அத்தோடு முஸ்லிம் தேசிய காங்கிரசும் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்சிகளும் பெற்றுக்கொண்ட ஆசன விபரங்களும்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி 128

ஐக்கிய மக்கள் சக்தி 47

இலங்கை தமிழரசுக் கட்சி 09

தேசிய மக்கள் சக்தி 02

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 02

தேசிய காங்கிரஸ் 01

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 01

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 01

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 01

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 01

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 01

அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் 01

முஸ்லிம் தேசிய கூட்டணி 01

Today rasi palan – 07.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 07, 2020)

About அருள்

Check Also

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு ‘ விருப்பு வாக்கு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட …