Breaking News
19 ஆம் திருத்தத்தை நீக்கும் முயற்சி ஜனநாயகத்திற்கு எதிரானது - எம்.ஏ.சுமந்திரன்

19 ஆம் திருத்தத்தை நீக்கும் முயற்சி ஜனநாயகத்திற்கு எதிரானது – எம்.ஏ.சுமந்திரன்

19 ஆம் திருத்தத்தை நீக்கும் முயற்சி ஜனநாயகத்திற்கு எதிரானது – எம்.ஏ.சுமந்திரன்

19 ஆம் திருத்தத்தை நீக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளமை ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கம் இலங்கையின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பு ஒரு சமூக ஒப்பந்தம்.

நாட்டிலுள்ள சகல மக்கள் தமக்கிடையே, தமக்குள் செய்து கொள்ளும் ஒரு புரிந்துணர்வு இதுவாகும்.

ஜனநாயக அமைப்புக்கள் எப்படியாக இயங்கப் போகின்றது என்ற கேள்விக்குப் பதிலளிப்பதற்கே அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது.

அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு அரசியலமைப்பு இல்லாமையே இலங்கையின் தேசிய பிரச்சினைக்குக் காரணமாகும்.

சிறுபான்மையான மக்களை புறந்தள்ளி, அவர்களது விருப்பங்களுக்கு முரணாகத் தமக்கு தேவையானவைiயை மாத்திரம்; சாதிக்கும் அரசியலமைப்புக்களை தொடர்ச்சியாக உருவாக்கியமைiயின் காரணமாகவே இனப் பிரச்சினை தோன்றியதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா

About அருள்

Check Also

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020) இன்றைய பஞ்சாங்கம் …