Breaking News

ஆப்கானில் பயங்கரவாத தாக்குதல்

ஆப்கானில் பயங்கரவாத தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், சமூக தலைவர் அப்துல் அலி மஸ்ரியின் நினைவு நாளை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 32 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களில் சிலரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

அமெரிக்கா- தலீபான்கள் இடையே அமைதி ஒப்பந்தம் நிறைவேறிய பிறகு, ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் நடத்தும் முதல் தாக்குதல் இதுவாகும்.

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் மனிதம் மற்றும் ஆப்கானிஸ்தானின் தேசிய ஒற்றுமைக்கு எதிரான தாக்குதல்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகள் கண்டிப்பாக ஒன்று திரளவேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

 

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …