இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

பாலியல் குற்றங்களை விசாரிக்க 24 நீதிமன்றங்கள் திறப்பு!

அதிரடி காட்டுகிறது கேரளா

பாலியல் குற்றங்களை விசாரிக்க 24 நீதிமன்றங்கள் திறப்பு!

கேரளாவில் பெண்கள் மற்றும் சிறாருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் புகார்களை விசாரிக்க 28 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க கேரள அரசு முடிவு செய்திருக்கிறது.

கேரளாவின் சமூக நீதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா பேசும் போது, ‘மோசமான குற்றங்களை செய்வோருக்கு தண்டனை விரைந்து அளிக்கப்பட வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கும் சூழலில் விரைவு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன என்று தெரிவித்தார்.

‘போக்சோ’ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் குற்றங்களை விசாரிப்பதற்கு 28 விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று மாநில அரசு முடிவு செய்து, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. இதனை மத்திய அரசு ஏற்று, நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

கேரள உயர் நீதிமன்றம், சட்டத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்’ என்கிறார் அவர்.

கேரளாவில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 12 ஆயிரத்து 234 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை விரைந்து முடிப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன.

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவ காவாலிகள் புகைகடங்கள் கசிந்தன

பாலியல் ராக்கிங்: 2ஆம் வருட மாணவனுக்கு பல்கலைக்குள் நுழையத் தடை!

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close