Breaking News

மாத்திரை பாக்கெட்டுகள் இங்கிலாந்து சென்றன

மாத்திரை பாக்கெட்டுகள் இங்கிலாந்து சென்றன

கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, சில அத்தியாவசிய மருந்து பொருட்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்து இருந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளை ஏற்று இந்த தடையை நீக்கியது.

இதற்கிடையே, இங்கிலாந்து கோரிக்கையை ஏற்று, காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், 28 லட்சம் பாராசிட்டமால் மாத்திரை பாக்கெட்டுகளை கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது. இந்த மாத்திரை பாக்கெட்டுகள், இங்கிலாந்து சென்றடைந்தன.

இதையடுத்து, இங்கிலாந்து சர்வதேச வர்த்தக மந்திரி லிஸ் ட்ரஸ், இந்தியாவுக்கு புகழாரம் சூட்டினார். அவர் கூறியதாவது:-

இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த பாடுபட்ட இந்திய, இங்கிலாந்து அதிகாரிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கொரோனாவை முறியடிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறோம்.

இந்தியா அனுப்பி வைத்த மாத்திரை பாக்கெட்டுகள் விரைவில் இங்கிலாந்து சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும், சில்லரை மருந்தகங்களுக்கும் வினியோகிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இதுபோல், இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலக மந்திரி லார்டு தாரிக் அகமது, கடந்த வாரம் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு – மத்திய அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்கள்



Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …