Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / பெற்றோர் அலட்சியத்தால் இன்றும் 3 வயது குழந்தை பலி!
குழந்தை

பெற்றோர் அலட்சியத்தால் இன்றும் 3 வயது குழந்தை பலி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

நடுக்காட்டுப்பட்டி சிறுவன் சுஜித்தை மீட்க மீட்புப்படையினர் போராடினாலும் அது தோல்வியில் முடிந்தது.

ஆனால் உண்மையில் சுஜித்தின் மரணத்திற்கு அவனது பெற்றோர்களின் அலட்சியமே முழுக்க முழுக்க காரணம்.

சுஜித்தின் மரணத்திற்கு பின்னரும் தமிழகத்தில் ஒருசில குழந்தைகள் பெற்றோர்களின் அலட்சியத்தால் பலியாகி வந்த நிலையில் இன்று ஆம்பூர் அருகே தண்ணீர் சேமித்து வைத்திருந்த கேனில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வீராங்குப்பம் என்ற பகுதியை சேர்ந்த வீரமணி-ரம்யா தம்பதியின் 3 வயது மகள் யஷ்வந்திகா வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தது.

அப்போது, துணிகளை துவைக்க வைத்திருந்த 35 லிட்டர் கொள்ளவு கொண்ட டிரம்மில் அந்த குழந்தை தவறி தலைகீழாக விழுந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதுகுறித்து தாமதமாக புரிந்து கொண்ட அந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக குழந்தையை அருகில் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியதால் பெற்றோர்கள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பெற்றோர்களின் அலட்சியத்தால் சின்ன குழந்தைகள் பலியாக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கண்டு சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க :

சுஐித் மரணம்..வேதனை அளிக்கிறது இருந்து..உலகிற்கு…பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான்

வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கவலைக்கிடமான நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

ஒரு கோடி இழப்பீடு, அரசு வேலை: சுஜித் குடும்பத்திற்கு வழங்க திருமாவளவன் கோரிக்கை!


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

Check Also

மருத்துவமனை

கின்னஸ் சாதனை படைத்த பிரபல பின்னணி பாடகி மருத்துவமனையில் அனுமதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Shares ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றழைக்கப்படுபவரும் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புரிந்தவருமான பிரபலப் பாடகி லதா …