இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கை அகதிகள் 3000 பேர் நாடு திரும்ப இணக்கம்!

- வெளிவிவகார அமைச்சர் தினேஷ் தெரிவிப்பு

இந்தியாவில் உள்ள 3000 தமிழ் அகதிகள் இலங்கைக்குத் திரும்ப இணங்கியுள்ளனர் எனவும், அடுத்த சில மாதங்களுக்குள் அவர்கள் நாடு திரும்புவார்கள் எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தபோது CNN – News18 தொலைக்காட்சிக்கு செவ்வியொன்றை வழங்கியிருந்தார்.

இதன்போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு முன்னதாக, நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் நிறுவனர் சந்திரஹாசன் தலைமையிலான அமைப்பினர் மேற்கொள்வதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

தான் சில வாரங்களுக்கு முன்னர் சந்திரஹாசனைக் சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close