Breaking News

இந்தியாவிலிருந்து 320 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து 320 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா தொற்றுக் காரணாக இந்தியாவில் சிக்கித் தவித்த 320 இலங்கையர்கள் இன்றையதினம் சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு. எல். 1122 என்ற விமானம் மூலம் இந்தியாவின் சென்னையிலிருந்து 320 இலங்கையர்களும் நண்பகல் 12.35 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு இந்தியாவிலிருந்து இன்று வருகை தந்த இலங்கையர்களுள் கர்ப்பிணத் தாய்மார்களும் உள்ளடங்குகின்றனர்.

விமான நிலைய சுகாதார அதிகாரிகளால் 320 பயணிகளது உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டு அவர்களிடம் கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் உள்ளதாவென்றும் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த இலங்கையர்கள் அனைவரும் அவர்களின் பொதிகளும் தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இராணுவத்தின் பேருந்துகள் மூலம் தனிமைப்படுதல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

புலிகளுக்கு எதிராக எந்த கருத்தையும் வெளியிடவில்லை- எம்.ஏ.சுமந்திரன்புலிகளுக்கு எதிராக எந்த கருத்தையும் வெளியிடவில்லை- எம்.ஏ.சுமந்திரன்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …