Breaking News

கொரோனா அப்டேட் (ஏப்ரல் 22) – கத்தார்

கொரோனா அப்டேட் (ஏப்ரல் 22) – கத்தார்

கத்தாரில், கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பத்தாவது மரணம் மற்றும் புதிய 608 உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 75 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (22-04-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 7,141ஆக உயர்ந்துள்ளது.

மேலும், COVID-19 தொற்றுக்குள்ளான புதிய நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவையைப் பெற்றுள்ளன என்பதாகவும் MoPH தெரிவித்துள்ளது.

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, மருத்துவமனையில் இருந்து மேலும் 75 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 689ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 3,287 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில், இதுவரை 70,012 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

கத்தாரில் வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்காக சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்புடனும், அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தனிமைப்படுத்தி கொண்ட இம்ரான்கான் – Imrankhan

கொரோனா தடுப்பூசி தயார் நாளை முதல் மனிதர்கள் மீதான சோதனை – Coronavirus Vaccine

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …