ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் பூட்டியிருந்த வீட்டின் உள்ளே நடந்த துப்பாக்கி சூட்டில் நான்கு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஆஸ்மிங்டன் நகரில் அமைந்திருக்கும் வீட்டின் வெளியே 2 துப்பாக்கிகள் கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்குள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, அந்த பகுதிக்கு உடனடியாக விரைந்த போலீசார் துப்பாக்கி கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்ப்போது அந்த வீட்டின் உள்ளே நான்கு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சுட்டு கொல்லப்பட்டு இருந்தது போலீசார்க்கு தெரியவந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த 7 பேரின் உடலையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Visit Our Sites:

Tamilnewsstar.com

Tamilaruvi.news

Tamilaruvi.tv

Tamilaruvimedia.com

Tamil24news7.com

Check Also

குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் பயணிகள் விமானம்

குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் பயணிகள் விமானம்

குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் பயணிகள் விமானம் பாகிஸ்தானில் 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் லாகூரில் …