உலக செய்திகள்முக்கிய செய்திகள்

ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க பயங்கரவதிகள் பலி

ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க பயங்கரவதிகள் பலியானதாக ஈரான் அரசு டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈராக்கின் அல் அசாத் மற்றும் எர்பில் ஆகிய பகுதிகளில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசித் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈராக்கில் உள்ள ராணுவத் தளங்கள் தாக்கப்பட்டதை அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனும் உறுதி செய்தது.

டொனால்டு டிரம்பும் தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதி செய்திருந்தார்.

இந்த நிலையில், ஈரான் நடத்திய தாக்குதலில் 80 அமெரிக்க பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக ஈரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹெலிகாப்டர் உள்பட ஆயுதங்களும் பலத்த சேதத்துக்குள்ளானதாக அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான், ஈராக் மீது விமானங்கள் பறக்க அமெரிக்கா

Show More

Related Articles

Back to top button
Close