Breaking News
தேர்தலுக்கு முன் வாக்களித்த 9.5 கோடி அமெரிக்கர்கள்

தேர்தலுக்கு முன் வாக்களித்த 9.5 கோடி அமெரிக்கர்கள்

தேர்தலுக்கு முன் வாக்களித்த 9.5 கோடி அமெரிக்கர்கள்

கொரோனா பரவல் மற்றும் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் பொருட்டு, தேர்தலுக்கு முன்னதாகவே அஞ்சல் மூலமாகவும் மற்றும் வாக்குச்சாவடிக்கு சென்றும் பொதுமக்கள் வாக்களித்து வந்தனர்.

அந்த வகையில், 9 கோடியே 50 லட்சத்து 27 ஆயிரத்து 832 அமெரிக்கர்கள் தேர்தலுக்கு முன்பே வாக்களித்து உள்ளனர்.

இவற்றில் நேரில் சென்று வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 76 ஆயிரத்து 166 ஆகவும், மெயில் வழியே வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 6 கோடியே 4 லட்சத்து 51 ஆயிரத்து 666 ஆகவும் உள்ளது.

அமெரிக்காவில் மக்கள் நேரில் சென்று வாக்களித்த எண்ணிக்கையை விட மெயில் வழியே வாக்களித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது.

கொரோனா பாதிப்பு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள சூழலில் அதில் இருந்து தப்பிக்க அமெரிக்கர்கள் அதிக அளவில் முன்பே வாக்களித்து உள்ளனர்.

Today rasi palan – 03.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (நவம்பர் 03, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)   இன்றைய …