இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

14 வயதுடைய மயூரன் மதுபன் என்ற மாணவனே இன்று இரவு பாடசாலை விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உரும்பிராயை சேர்ந்த இவர் கிளிநொச்சியில் வசித்து வந்துள்ளார்.

இதன்போது இச் சிறுவனது தாயார் இறந்த நிலையில் தந்தை வேறொரு திருமணத்தை செய்திருந்தார்.

இந்நிலையில் தந்தையும் தந்தையின் இரண்டாம் மனைவியுமாக இச் சிறுவனை வேலணை மத்திய கல்லுரியின் விடுதியில் தங்க வைத்து கற்பிக்குமாறு கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் கோரியுள்ளனர்.

இதனையடுத்து இச் சிறுவன் வேலனை மத்திய கல்லூரி விடுதியில் தங்க வைத்து கற்பிக்கப்பட்டு வந்துள்ளார்.

இருந்த போதிலும் இச் சிறுவன் விடுதியில் இருந்து தப்பித்து தனது உறவினர்களிடம் சென்றதாகவும் பின்னர் அவர்கள் கூட்டி வந்து மீள பாடசாலையில் விட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இன்றைய தினம் இரவு குறித்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close