Sunday , July 22 2018
Breaking News
Home / Headlines News / கேரளா கஞ்சாவுடன் ஒருவர் பேலிகொடயில் கைது

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் பேலிகொடயில் கைது

பேலியகொட, மானெல்கம களனி பிரதேசத்தில் ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 8 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் களனி பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

 Views 0

Check Also

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.?வெளிவந்த தகவல்..! காரணம் இதோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார வெளியே போகும் போட்டியாளர்கள் பட்டியலில் பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி ஐயர், ரம்யா, ஐஸ்வர்யா …