Breaking News
மே 17ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்

மே 17ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்

மே 17ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு காலை 5 மணிக்கு தளர்த்தப்படும். பின்னர் 17 ஆம் திகதி ஞாயிறு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா தவிர இதர அனைத்து மாவட்டங்களிலும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு 23ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகி காலை 5 மணிக்குத் தளரும்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இயல்பு நிலையை ஏற்படுத்த முன்னர் விடுத்த அறிவிப்பு அப்படியே இருக்கும். ஊரடங்கு அமுலில் இருந்தாலும் அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் நடக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மூன்று மாத சம்பளத் தொகையான 2 இலட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாவை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

அதற்கான காசோலை ஜனாதிபதியால் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவிடம் கையளிக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மொழிப்பெயர்ப்பை உரியவகையில் கையாளாமையே தம்மீதான விமர்சனஙகளுக்கு காரணம் – எம்.ஏ.சுமந்திரன்

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …