தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு கேட்டதற்காக மன்னிப்பு கேட்ட இளம்பெண்!

சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து பத்து வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் அந்த கட்சி ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கூட பெற முடியவில்லை.

சீமானின் பொதுக்கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தாலும் அவர்களில் ஒரு சிலர் கூட சீமான் கட்சிக்கு வாக்களிக்க வில்லை என்பதைத் தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மட்டும் நாங்குநேரி அருகே சட்டப்பேரவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்த கல்பனா என்ற இளம்பெண் தற்போது சீமானின் கட்சியிலிருந்து விலகி உள்ளார்

ஈழம் குறித்த நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை கவர்ந்துதான் அந்த கட்சியில் தான் சேர்ந்ததாகவும் ஆனால் தற்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்திய்தோடு அந்த கொலையை நாங்கள்தான் செய்தோம் என்று சீமான் கூறியிருப்பது தனது உடன்பாடு இல்லை என்பதால் அந்த கட்சியில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாம் தமிழர் கட்சிக்காக தான் வாக்கு கேட்டு சென்ற போது தன்னுடைய பேச்சை கேட்டு வாக்களித்த அனைவரிடமும் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் சீமானின் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளும் சீமான் நடந்து கொள்ளும் விதமும் முரண்பாடாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி
இதையும் பாருங்க :

சுஐித் மரணம்..வேதனை அளிக்கிறது இருந்து..உலகிற்கு…பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான்

வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கவலைக்கிடமான நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

ஒரு கோடி இழப்பீடு, அரசு வேலை: சுஜித் குடும்பத்திற்கு வழங்க திருமாவளவன் கோரிக்கை!

Tags
Show More

Related Articles

Back to top button
Close