தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

ரஜினிகாந்த் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன்: எச்.ராஜா

ரஜினிகாந்த் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன்: எச்.ராஜா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தான் மூன்று திட்டங்கள் வைத்திருப்பதாகவும், தமிழகத்தில் ஒரு எழுச்சி, புரட்சி ஏற்பட வேண்டும் என்றும்,

மக்கள் விழிப்புணர்ச்சி அடைய வேண்டும் என்றும் இப்போது அரசியல் மாற்றம் ஏற்படவில்லை எனில் இனி எப்போதும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஜினியின் இந்த கருத்து குறித்து கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து கூறிவிட்ட நிலையில் தற்போது எச்.ராஜா அவர்களும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா இதுகுறித்து கூறியதாவது: தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

அதாவது ஜாதிபலம் பணபலம் இல்லாமல் நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும் அதற்கு மக்களையும் தயார்படுத்த வேண்டும்.

எந்தக் கட்சியாக இருந்தாலும் அதன் தொண்டர்களைத் தயார்ப்படுத்த வேண்டும் என்ற அளவில் ரஜினிகாந்த் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் அதற்குப் பிறகு அவர் எப்படி செயலாற்றுவார், வருவார் வரமாட்டார், கட்சி ஆரம்பிப்பார், ஆரம்பிக்க மாட்டார் என்பதையெல்லாம் நாம் விவாதிக்க வேண்டியதில்லை. அது அவரோட முடிவு” என்று கூறினார்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

Today rasi palan 15.03.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 15 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை

எனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர்களுக்கு ரஜினிகாந்த்

ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் இலங்கை வர தடை

கொரோனா வைரஸ் நோயின் மையமாக ஐரோப்பா

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் |Corona virus that threatens the world | 14.03.2020 | Tamilaruvitv

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close