Breaking News

கிளிநொச்சி விபத்தில் வயோதிபர் பரிதாபச் சாவு!

கிளிநொச்சி மாவட்டம், 155 ஆம் கட்டைப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டொல்பின் ரக வான் ஒன்று சைக்கிள் ஒன்றின் மீது மோதியபோதே விபத்து ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி, மலையாளபுரத்தைச் சேர்ந்த 73 வயதுடைய சின்னையா சுப்பிரமணியம் என்ற 8 பிள்ளைகளின் தந்தையான வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் குறித்த வயோதிபர் பணிக்காகச் சென்றுகொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கியுள்ளார்.

படுகாயங்களுடன் அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டார் எனவும், எனினும், அவர் பின்னர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலமாக மீட்கப்பட்டார் யாழ். பல்கலை மாணவி!

About விடுதலை

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …