முக்கிய செய்திகள்

புராணங்களின்படி சிவபெருமான் மற்றும் பார்வதிக்கு இத்தனை குழந்தகளா….?

மும்மூர்த்திகளில் முக்கியமானவர் சிவபெருமான். அவரின் மனைவி பார்வதி இவர்கள் இருவருக்கும் பிள்ளையார், முருகன், ஐயப்பன் என மூன்று பிள்ளைகள் உள்ளது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு உண்மையிலேயே மொத்தம் 8 குழந்தைகள் என சிவ புராணத்திலும், லிங்க புராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்வதி ஒருமுறை சிவனின் கண்களை கட்டினார். அப்பொழுது ஏற்பட்ட வியர்வையால் ஒரு குழந்தை உருவானது. பின்னர் ஹிரான்யக்ஷா என்னும் மன்னன் சிவ பெருமானிடம் குழந்தை வரம் கேட்ட போது அந்த குழந்தையை கொடுத்து விட்டார். பிறக்கும் போதே அந்த குழந்தை கண் பார்வை இல்லாமல் பிறந்த்து குறிப்பிடத்தக்கது. அதன் பெயர் அந்தகா ஆகும்.

சிவ பெருமானின் விந்து நாக தேவதை மீது பட்டதால் ஒரு குழந்தை பிறந்ததாகவும் அதன் பெயர் மானசா என்றும் புராணங்களில் கூறப்படுகிறது. சிவ பெருமான் தியானத்தில் இருக்கும் போது அவரது மார்பிலிருந்து வெளிவந்த சக்தி வாய்ந்த கதிர்வீச்சால் உருவானவர் தான் குஜா என கூறப்படுகிறது.

அடுத்ததாக ஜோதி இவர் சிவ பெருமானின் ஒளிவட்டத்தில் இருந்து பிறந்ததாக ஒரு சில கதைகள் கூறினாலும், பார்வதி தேவியின் நெற்றி பொட்டில் வந்த தீப்பொறியில் இருந்து உருவானதாகவும் கூறப்படுகிறது.

ஐயப்பனை பற்றி எல்லோருக்குமே தெரியும். சிவ பெருமான் மற்றும் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவிற்கு மகனாக பிறந்தவர் தான் இவர். அசோக சுந்தரி, இவர் பிள்ளையாரை போன்றே பார்வதி தேவியால் உருவானவர்.

சிவனுக்கும் பார்வதிக்கும் மூத்த மகனாக பிறந்தவர் தான் முருகப்பெருமான். கடைசியாக முதன்மை கடவுளான விநாயகர். இவரும் சிவன் மற்றும் பார்வதி இருவருக்கும் பிறந்த குழந்தை தான்.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close