சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

விஷால் திருமணம் நிறுத்தப்பட்டது..?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் , தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்த விஷால், நடிகர் சங்கத்தின் கட்டிடம் முடித்த பிறகுதான் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா அல்லா ரெட்டி என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதையடுத்து வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இரு குடும்பத்தாரும் தீவிரமாக திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

ஆனால், தற்போது இந்த திருமணம் நிறுத்தப்பட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

காரணம், அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருக்கிறார்.

இதுகுறித்து விஷால் மற்றும் அனிஷா தரப்பினரிடையே இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இது வதந்தியாக இருந்தால் நிச்சயம் இதற்கு விஷால் மற்றும் அனிஷா தரப்பினரிடம் இருந்து செய்தி வரும், ஒரு வேலை இது உண்மையாக இருந்தாலும் விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
Close