Breaking News
சூப்பர்

சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்து: கஸ்தூரி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி நடிகை கஸ்தூரி தல அஜித் ரசிகர்களின் வார்த்தை வசையில் வசமாக சிக்கினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 69வது பிறந்தநாளை நேற்று (டிச.12) கொண்டாடினார். ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு பரிசாக தன்னுடைய சேரிட்டியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை லைகா நிறுவனத்தின் உதவியுடன், ‘2.0’ திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகஸ்தூரி தனக்கு மனதில் தோன்றுவதை யோசிக்காமல் பேசுவது வழக்கம். இந்நிலையில் தல அஜித் ரசிகர் ஒருவர், நேற்று பாரதியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகூறவில்லை ஆனால், நடிகராகிய ரஜினிக்கு மட்டும் வாழ்த்து கூறுகிறீர்களே என்றுஆபாச வார்த்தையால் கஸ்தூரியை சாடினார்.

இதனால் கடுப்பான கஸ்தூரி, அவருக்கு பதிலளிக்கும் விதமாக, ட்விட்டர்ல மாலைபோடுவது எப்படி என்று அறிய வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள் அதிமேதாவிஅண்ணன் அஜித்தின் ஒரே தம்பி ‘தல’ (வலி) செந்தில்குமார் ! இதனால் அஜித்தின் பலரசிகர்களும் கஸ்தூரியை சகட்டுமேனிக்கு வசைபாடி வருகின்றனர்.

பின் நடிகை கஸ்தூரி, அஜித் ரசிகரின் ட்விட்டை பகிர்ந்து, மரியாதை என்றால் என்னஎன்பதை இவரிடம் தான் கேட்ட வேண்டும். பாவம் அஜித், பாவம் பாரதி என பதிவுசெய்துள்ளார். இதுபோல் அஜித் ரசிகர்கள் சிலர் மோசமாக பேச கஸ்தூரியும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …