Breaking News
காதல் சர்ச்சையை

காதல் சர்ச்சையை தொடர்ந்து ‘சரக்கு’ சர்ச்சையில் சிக்கிய சாயிஷா…!

‘வனமகன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சாயிஷாவின் முதல் படமே வித்தியாசமான கதைக்களம் கொண்ட வெற்றிப்படமாகவும் அமைந்தது.

மும்பையில் பிறந்து வளர்ந்த பெண் என்பதால் நடிகர்களுடன் மிகவும் சகஜமாக பழகி விடுகிறார். மேலும் தமிழ் பட வாய்ப்புகள் அதிகமாக இவரை தேடி வருவதால் தமிழ் கற்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய பிறந்த நாளை கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் கொண்டாடினார். இதுவரை நடிகைகளின் பிறந்த நாள் விழாக்களில் கலந்து கொள்ளதாக நடிகர் பிரபுதேவா கலந்து கொண்டு, சாயிஷாவுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.

இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக ஒரு சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில், சாயிஷா தற்போது சரக்கு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்ட மூத்த நடிகர் ஒருவர் கூறுகையில், “நடிகைகள் மது விருந்து கொடுப்பது சாதரணமான விஷயம் தான்.

ஆனால், திருமணம் ஆகாத ஒரு நடிகை மது விருந்து கொடுப்பது இதுவே முதல்முறை” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதனால் இவருக்கு நெருக்கமானவர்கள் சிலர் மும்பையில் இதெல்லாம் சகஜம் என்றாலும் இங்கே இதெல்லாம் வேண்டாம் என அட்வைஸ் செய்து வருகிறார்களாம்!

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …