Breaking News
ஸ்ரீரெட்டி

ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய படம்: என் அந்தரங்க காட்சிகளை படத்தில் வெளியிடுவேன்: பரபரப்பு பேட்டி!

ரெட்டி டைரி என்ற புதிய படத்தில் தன்னுடைய அந்தரங்க காட்சிகள் இடம்பெறும் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அறிவித்துள்ள சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஶ்ரீரெட்டியின் வாழ்க்கை போராட்டம் குறித்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி திரைப்படம் வெளியாக உள்ளது.

ரெட்டி டைரி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தித்தர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் ரவிதேவன், ரங்கீலா எண்டர்பிரைசஸ் சித்திரைச்செல்வன் இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஸ்ரீரெட்டி, ‘என்னை ஏமாற்றியவர்கள் குறித்த ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அதே நேரம் வரும் போது கண்டிப்பாக வெளியிடுவேன்.

இந்தப் படத்தை பொறுத்தவரையில், நடிகர் சங்கம் இத்திரைப்படத்தை எடுக்க முழு ஒத்துழைப்பு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

என்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியவர்களின் வீடியோ ஆதாரங்கள் அனைத்தையும் ‘ரெட்டி டைரி’ படத்தின் மூலமாக வெளியிடப் போகிறேன்.

அதே போல எனது குற்றச்சாட்டுகள் இன்னும் முடியவில்லை. அது தொடர்பான பட்டியல் தொடரும் என்று கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இத்திரைப்படத்திற்குத் தேவையான காட்சிகள் ஏற்கனவே ரகசிய கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டிருப்பதால் அந்தக் காட்சிகளை படத்தில் பயன்படுத்தப்படும் என்று இயக்குநர் அலாவுதீன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …