Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்க தீர்மானம்…?
சசிகலா

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்க தீர்மானம்…?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

கடந்த 2017ம் ஆண்டுக்குப் பிறகு அதிமுக பொதுக்குழுக் கூட்டம், இன்று காலை நடைபெறுகிறது. இதில் உள்ளாட்சித் தேர்தலில் கட்சிப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படவுள்ளன.

பரபரப்பான சூழலுக்கிடையே அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு துவங்குகிறது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கூடுகிறது. அதிமுக இணைப்புக்குப் பிறகு நடைபெறும் 2-வது பொதுக்குழுக் கூட்டமும் ஆகும்.

பொது இடங்களில் பேனர் – கட் அவுட் வைக்கக் கூடாது என்னும் நீதிமன்றம் உத்தரவால் மலர் அலங்காரம், தோரணங்களை அதிக அளவில் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் கூட்டம் நடைபெறும் மண்டப வளாகத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதிமுக

இதற்கு முன்பு கடந்த 2017ம் ஆண்டில் இதே மண்டபத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. )எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைந்த பிறகு நடைபெற்ற முதல் பொதுக் குழுக் கூட்டம் அது,அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக வரலாற்றில் இல்லாத வகையில் பல முக்கிய முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

முக்கியமாக, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்றோர் வகித்த பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் சசிகலா அப்பதவியை இழந்தார்,

மேலும் துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டது உள்ளிட்ட சசிகலாவின் அனைத்து நியமனங்களையும் அதிமுக பொதுக்குழு ரத்து செய்தது.

கட்சியின் முக்கிய முடிவுகளை ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் எடுப்பார்கள் என்கிற முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமும் கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

அவற்றுடன் 2016 டிசம்பரில் சசிகலா தலைமையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் ரத்து செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இன்றைய கூட்டத்தில்) நாங்குநேரி – விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற உழைத்த கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் இடைத்தேர்தல் வெற்றி மற்றும் முதல்வர்- துணை முதல்வர் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணங்களின் வெற்றி மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படக் கூடும்.

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பங்கீடு குறித்தும் பொதுக்குழுவில் கருத்துக் கேட்கப்படும் என்றும் கட்சியினர் கூறுகின்றனர்.

சிறையில் இருக்கும் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படவும் வாய்ப்பு உள்ளது. பொதுக்குழுவில் மாவட்டச் செயலாளர்கள் உள்பட கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ள 2 ஆயிரத்து 300 பேரும், அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் 500-க்கும் அதிகமானோரும் பேரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 4
    Shares

Check Also

பிரிட்டன்

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!4Shares பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் …