Breaking News
அதிமுகவில் விரிசலா

அதிமுகவில் நடக்கபோவது என்ன?!

வரும் 16ம் தேதி சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் 16ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் கட்சி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் நடைபெற உள்ளது. “என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் பணியில் அதிமுக செயல்பட போவதாக கூறப்படுகிறது. அதிமுகவில் பல பிரிவுகள் உருவாகிவிட்ட நிலையில் மற்ற அணியிலிருக்கும் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அதிமுகவிற்கு கொண்டு வரும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக தனது தேர்தல் பணிகளை திட்டமிட்டு தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவும் அதனை சமாளிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. பதவி ஆசை காட்டி தினகரன் தரப்பை கலகலக்க வைக்கவும் வாய்ப்புள்ளது

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …