Breaking News

ஐஸ்வர்யா, யாஷிகா பேச்சை கேட்டு தப்பு பண்ணிட்டேன்

பிக் பாஸ் வீட்டில் நிறையப் பேர் என் முதுகுல குத்தியிருக்காங்க, நான் ஐஸ்வர்யா,யாஷிகா கூடச் சேர்ந்து தப்பு பண்ணிட்டேன் என்ன மன்னிச்சிடுங்க என்று டேனியல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதில் பிக் பாஸ் டைட்டிலை டேனியல் தான் வெல்வார் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், கடந்த வாரம் மக்களின் வாக்குகள் அடிப்படையில் டேனி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற டேனியல் தனது காதலி குட்டுவை பதிவுத் திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து டேனியல் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரும் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணீங்க. இவ்ளோ ஓட்டு போட்டு டேனியல் எப்படி வெளியே வந்தானு எனக்கே ரொம்ப ஷாக்கா இருக்கு. ஏன்னா எல்லாருமே எனக்காக தான் நெறைய ஒட்டு போட்டுருக்கீங்க, நிறைய பேரு சொன்னாங்க ஆக்டர் மாதிரி நீ இல்ல ஆக்ஷுவலா இருந்தேன்னு.

அது எனக்கு ரொம்ப பிடிச்சியிருந்துச்சு. என் கல்யாணம் உடனே முடிவானதுனால என்னால யார்கிட்டேயும் சொல்ல முடியல.அதனால என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்க’ என்று கூறியுள்ளார்.

‘இப்போ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவோம், எல்லாரும் கேட்குற ஒரே விஷயம் டேனி எப்படி வெளியே வந்தானு தான் கேட்குறாங்க. நான் என் வீட்டை ரொம்ப மிஸ் பண்னேன்.அதனால தான் வந்துட்டேன்.மத்தபடி வேற எதுவுமே இல்லை. உள்ளே நெறைய பேரு கிட்ட சண்டை வந்துச்சு.

இப்போ கூட என்ன பார்த்த ஒரு அம்மா, டேனியல் எப்படி மகத் கடிக்கலாம்னு ரொம்ப கோவமா கேட்டாங்க. அந்த அளவுக்கு நான் எல்லாருடைய மனசுலையும் இடம் பிடிச்சிருக்கேன். முக்கியமான ஒரு விஷயம் உள்ளே நிறைய பேரு என் முதுகுல குத்தியிருக்காங்க, நீங்களும் நான் ஐஸ்வர்யா,யாஷிகா கூட சேர்ந்து தப்பு பண்ணாத சொல்லிருக்கீங்க, கண்டிப்பா அத நான் ஒத்துக்குறேன்.

நீங்க பார்த்த அந்த விஷயம்லாம் என் கண்ணுக்கு தெரியலங்க. நீங்க 60 கேமிரால பார்த்துட்டு இருக்கீங்க. என் தப்ப நான் உணர்ந்துட்டேன்.பின்னாடி குத்துறவங்களையும், நம்பிக்கையில்லா ஆட்களை வச்சிட்டு சுத்துறதும்,அது மூலமா மத்தவங்கள மரியாதை இல்லாம ட்ரீட் பண்ணுறதும் தப்புன்னு உணர்ந்துட்டேன்.

இனிமே அந்த மாதிரி நான் செய்ய மாட்டேன், எனக்கு சப்போர்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

About அருள்

Check Also

தமிழ்நாட்டு

தமிழ்நாட்டு சிக்கல்களை எடுத்துரைக்கும் பிக்பாஸ் வீடு

தொடர்ந்து 100 நாட்கள் நடைபெற உள்ள பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இன்று விஜய் டிவியில் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் நடிகை …