Breaking News
எனக்கு உள்ள இருக்க பிடிக்கல

எனக்கு உள்ள இருக்க பிடிக்கல : கதறி அழுத ஐஸ்வர்யா

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவாரு என எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்வர்யா, மக்களால் காப்பாற்றப்பட்டார்.

எனினும் அவர் பிக் பாஸ் ஹவுஸில் இருக்க பிடிக்கல என பாத்ரூமில் கதறி அழும் புரோமோ வீடியோ வெளியாகவுள்ளது.

சென்ராயனை தலையில் கலரடிக்க வைக்க, பொய் சொல்லி ஏமாற்றிய ஐஸ்வர்யாவுக்கு கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுப்பேன் என தெரிவித்தார்.

ஆனால் மக்கள் ஐஸ்வர்யாவை எவிக்டாகவிடாமல் காப்பாறினார்கள். ஆனால் ஐஸ்வர்யாவால் கமல் பேசியதை தாங்க முடியவில்லை. இந்த இடத்தில் இருக்க முடியாது என கதறி அழுகிறார்.

நீ வெளியே சென்றால் இன்னும் பல விஷயங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என ஐஸ்வர்யாவுக்கு யாஷிகா அறிவுரை கூறுகிறார்.

அதன்பிறகு மும்தாஜும் ஆறுதலாக பேசுகிறார். எனினும் ஐஸ்வர்யா இந்நிகழ்ச்சியில் தொடர விருப்பமில்லாதவர் போலவே இருக்கிறார்.

ஐஸ்வர்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …