Breaking News
ஐஸ்வர்யாவை

ஐஸ்வர்யாவை சைக்கோ,மெண்டல் என்று சகட்டு மேனிக்கு திட்டிய நடிகர் சதிஷ்; காரணம் என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சில் இந்த வாரம் சர்வாதிகாரியாக வலம்வந்த ஐஸ்வர்யாவை நடிகர் சதிஷ் சைக்கோ என்று சகட்டு மேனிக்கு திட்டியுள்ளார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 43 நாட்களைக் கடந்துள்ள நிலையில், சர்வாதிகார டாஸ்க் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பிக் பாஸ் வீடே சர்வாதிகார ராணி ஐஸ்வர்யா கையில் சிக்கி சின்னாபின்னமானார்கள்.

இந்நிலையில், வைஷ்ணவி மீண்டும் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.அதே போல் சுவாரஸ்யம் இல்லாமலும் விறுவிறுப்பு இல்லாமலும் சென்று கொண்டிந்த பிக் பாஸ் தற்போது இரண்டு நாட்களாக டென்ஷனை அதிகரிக்கும் வகையிலும் வெறுக்கத்தக்க வகையிலும் மாறியது.

ஐஸ்வர்யாவின் அட்டகாசம் சக போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவை குறித்து காமெடி நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில், ”பைத்தியம் பிடிச்ச லூஸ், கிறுக்கி, மெண்டல், சைக்கோ..

லூஸ் ஐஸ்வர்யாவுக்கு பொன்னம்பலம் தான் பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

சதீஷின் இந்த ட்வீட்டுக்கு பதில் அளித்த இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் சமீபத்தில் எவிக்சன் ஆனவருமான ரம்யா, ‘ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகளைப் பார்த்து நான் மிகவும் அப்செட் ஆகிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 3வாரங்களாகப் பயணித்த ரம்யா உள்படப் பார்வையாளர்கள் பலருக்கும் சலிப்பை ஏற்படுத்தும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மாறிக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகவே கருதப்படுகிறது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …