Friday , January 18 2019
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 / நான் அப்டி தான் கத்துவேன்- வைஷ்ணவியிடம் மல்லுக்கு நிற்கும் ஐஸ்!
நான் அப்டி தான் கத்துவேன்

நான் அப்டி தான் கத்துவேன்- வைஷ்ணவியிடம் மல்லுக்கு நிற்கும் ஐஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத்-டேனி சண்டை மட்டும் இல்லை, வைஷ்ணவி-ஐஸ்வர்யா மோதல் மிகவும் காரசாரமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க்கில், போட்டியாளர்கள் அனைவரும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

இதில் ப்ளூ டீமில் உள்ள வைஷ்ணவியும், மகத்தும், ஆரஞ்சு டீம் போட்டியாளர்களிடம் வம்புக்கு செல்கிறார்கள்.

இன்றைய நிகழ்ச்சி குறித்த புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஆரஞ்சு டீமில் உள்ள யாஷிகாவை விளையாடவிடாமல் கையை பிடித்து மடக்குகிறார் வைஷ்ணவி. இதை ஏற்க முடியாமல் பொங்கி எழும் ஐஸ்வர்யா, வைஷ்ணவியிடம் சகட்டுமேனிக்கு கத்தி சண்டையிடுகிறார். ஒருத்தர விளையாடவிடாம அவரது கையை பிடிப்பது ஸ்மார்ட்னெஸ் இல்லன்னு ரித்விகா சரியாக சுட்டிக் காட்டுகிறார்.

ப்ளூ டீமில் இருக்கவங்க மேல தான் தப்பு என்றது போல் இந்த புரொமோ வீடியோக்களில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இன்றைய நிகழ்ச்சியில் சண்டைக்கும், சச்சரவிற்கும் குறையாது என தெரிகிறது. சண்டைக்காக மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் பார்க்கவில்லை என நெட்டிசன்கள் சிலர் கூறி வருகின்றனர்.

Check Also

புதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்!

“தடைகள் வரும்போது அஞ்சமாட்டோம். அதைத் தகர்த்து அனைவரினதும் மனதையும் வெல்வோம். புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். …