Breaking News
நியாயமா

நியாயமா விளையாடுறீங்களா நீங்க? சென்றாயனை வறுத்தெடுக்கும் ரித்விகா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நியாயமா விளையாடுங்கன்னு அட்வைஸ் பண்ணும் சென்றாயனை வறுத்தெடுக்கிறார் ரித்விகா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க்கில், போட்டியாளர்கள் அனைவரும் ப்ளூ, ஆரஞ்சு என இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

இந்த டாஸ்க் ஆரம்பித்ததிலிருந்தே இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டியும் வாக்குவாதமும் நடந்து வருகிறது.

இன்றைய நிகழ்ச்சி குறித்த புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஆரஞ்சு டீமில் உள்ள ஐஸ்வர்யாவும், மஹத்தும் ஒருவரை ஒருவர் கையை பிடித்து மடக்கி சண்டை போடுகின்றனர். அப்போது ஐஸ்வர்யா, மஹத் தன்னை பிடித்து தள்ளுவதாக யாஷிகாவிடம் சொல்லிகிறார்.

உடனே ப்ளூ டீமில் இருக்கும் சென்றாயன், ரித்விகாவிடம் நியாயமா விளையாடுங்க, ரெண்டு டீமுக்கு தான் சொல்லுறேன் என்று அட்வைஸ் பண்ண, பொங்கி எழும் ரித்விகா, உங்க டீம்ல எப்படி விளையாடுறாங்கன்னு தெரியுமா? நியாயம விளையாடுறீங்களா நீங்க? தெரியாம வந்து பேசாதீங்கன்னு சொல்லி சென்றாயன் மூக்கை உடைக்கிறார்.

நேற்று வெளியான புரோமோக்கள் கூட ப்ளூ டீம் மீது நெகட்டிவான இமேஜ் கிரியேட்டிவ் ஆனது.

நேற்று வெளியான நிகழ்ச்சியில் மஹத் – டேனியல் சண்டை, வைஷ்ணவி – ஐஸ்வர்யா மோதல் என தொடர்ந்த நிலையில் இன்றும் பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …