சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

ஒரே நேரத்தில் அஜித், விஜய் படங்களின் ரீமேக்கில் அக்சயகுமார்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

இரட்டை வேடங்களில் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த 2014ஆம் ஆண்டு இயக்கிய நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது இந்த நிலையில் தற்போது இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்து விஜய்யின் இரட்டை வேட கேரக்டரில் அக்சயகுமார் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே அக்சயகுமார் ‘காஞ்சனா’ மற்றும் ‘வீரம்’ திரைப்படங்களின் ரீமேக்கில் நடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு தமிழ்ப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்திற்கு ‘IKKA’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை ஜெகன்சக்தி இயக்கவிருப்பதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் இந்த படத்தின் சமந்தா கேரக்டரில் நடிக்க சோனாக்சி சின்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.

மேலும் ஒரே நேரத்தில் அஜித் நடித்த ‘வீரம்’ மற்றும் விஜய் நடித்த ‘கத்தி’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் ரீமேக்கிலும் அக்சயகுமார் நடிக்கவிருப்பதாக முதல்முறையாக அஜித், விஜய் ஆகிய இரண்டு தரப்பினர்களும் அக்சயகுமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares
Tags
Show More

Related Articles

Back to top button
Close