Breaking News
அல் கொய்தா பயங்கரவாத இயக்க தலைவர் மாலி நாட்டில் படுகொலை

அல் கொய்தா பயங்கரவாத இயக்க தலைவர் மாலி நாட்டில் படுகொலை

அல் கொய்தா பயங்கரவாத இயக்க தலைவர் மாலி நாட்டில் படுகொலை

அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் பல்வேறு நாடுகளிலும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் மாலி நாட்டு தலைவராக பஹாக் மவுசா என்பவர் இருந்து வந்துள்ளார்.

இவர் மாலி நாட்டு பொதுமக்கள் மற்றும் சர்வதேச படைகளுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளார். அந்நாட்டின் சாஹெல் பகுதியில் முஸ்லிம்களின் வெற்றிக்கான படை பிரிவின் தலைவராகவும் மவுசா இருந்துள்ளார்.

இந்த பகுதியில் ஊடுருவல்களை தடுப்பதற்காக பிரான்ஸ் நாட்டு தலைமையிலான சிறப்பு ராணுவ படை பிரிவு கடந்த 2014ம் ஆண்டில் இருந்து தனது நடவடிக்கையை செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், தரை படைகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் பிரெஞ்சு படைகள் நடத்திய பயங்கரவாத வேட்டையில் மவுசா கொல்லப்பட்டு உள்ளார்.

இதனை பிரான்ஸ் நாட்டு ஆயுத படைகளுக்கான மந்திரி புளோரென்ஸ் பார்லி தெரிவித்து உள்ளார். பிரான்ஸ் நாடு தனது நட்பு நாடுகளை சாஹெல் பகுதியில் தலைமையேற்று வழிநடத்தி செல்கிறது.

மவுசா கொல்லப்பட்டு உள்ளது பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் கிடைத்த மிக பெரிய வெற்றி என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …